தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா பாதிப்பு: இந்தியாவில் ஒரேநாளில் 533 பேர் பலி! - கரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 42 ஆயிரத்து 982 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு

By

Published : Aug 5, 2021, 12:01 PM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (ஆக.04) புதிதாக 42 ஆயிரத்து 982 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை மூன்று கோடியே 18 லட்சத்து 12 ஆயிரத்து 114ஆக அதிகரித்துள்ளது.

14 ஆயிரம் பேர் குணம்

நேற்று (ஆக.04) மட்டும் 41 ஆயிரத்து 726 பேர் குணமடைந்த நிலையில் மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே ஒன்பது லட்சத்து 74 ஆயிரத்து 748ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை நான்கு லட்சத்து 11 ஆயிரத்து 76 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

562 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 533 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 26 ஆயிரத்து 290ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக இதுவரை 49 கோடியே 93 லட்சத்து 42 ஆயிரத்து 295 தடுப்பூசி டோஸ்கள், பயனர்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:ஸ்புட்னிக் வி விநியோகம் பிரச்னை: விரைவில் சரியாகிவிடும் எனத் தகவல்

ABOUT THE AUTHOR

...view details