தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் மேலும் 42,909 பேருக்கு கரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 380 நபர்கள் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

கரோனா
கரோனா

By

Published : Aug 30, 2021, 1:09 PM IST

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் கரோனா மூன்றாம் அலை ஏற்படலாம் எனத் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மீண்டும் அதிகரித்துவருகிறது.

கரோனா குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 42 ஆயிரத்து 909 நபர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை மூன்று கோடியே 19 லட்சத்து 23 ஆயிரத்து 405 நபர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று (ஆகஸ்ட் 29) 380 உயிரிழந்துள்ளனர். நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்து 38 ஆயிரத்து 210ஆக அதிகரித்துள்ளது. மூன்று லட்சத்து 76 ஆயிரத்து 324 நபர்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதில், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29 ஆயிரத்து 836 நபர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

கரோனா குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 63 கோடியே 43 லட்சத்து 81 ஆயிரத்து நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது.

இதையும் படிங்க: சிறார்கள் கவனம் - அக்டோபரில் மூன்றாம் அலை அபாயம்?

ABOUT THE AUTHOR

...view details