டெல்லி : கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரம் பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 581 ஆக பதிவாகியுள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பாளர்கள் தொடர்பான விவரங்களை ஒன்றிய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரத்து 806 பேர் புதிதாக கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக 39 ஆயிரத்து 130 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். தற்போதுவரை 4 லட்சத்து 32 ஆயிரத்து 41 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.