தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா பாதிப்பு.. 4ஆம் இடத்தில் தமிழ்நாடு! - இன்றைய கரோனா நிலவரம்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்புகள் 2 லட்சத்தை நெருங்கிவருகின்றன. ஒட்டுமொத்த பாதிப்பில் தமிழ்நாடு 4ஆம் இடத்தில் உள்ளது.

India
India

By

Published : Jan 11, 2022, 11:54 AM IST

டெல்லி: நாட்டில் கரோனா வைரஸ் பெருந்தொற்றால் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 63 பேர் பாதிக்கப்படுள்ளனர். எனினும் திங்கள்கிழமையுடன் (ஜன.10) ஒப்பிடும்போது பாதிப்புகள் 6.5 சதவீதம் குறைந்துள்ளன.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ நாடு முழுக்க 3 கோடியே 58 லட்சத்து 75 ஆயிரத்து 790 பேர் கரோனா பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்றைய உயிரிழப்பு 277 ஆக உள்ளது. அந்த வகையில் மொத்த உயிரிழப்புகள் 4 லட்சத்து 84 ஆயிரத்து 213 ஆக உள்ளன.

கரோனா பாதிப்புகளில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு 24 மணி நேரத்தில் 33 ஆயிரத்து 470 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த இடத்தில் மேற்கு வங்கம் (19,286), டெல்லி (19,166), தமிழ்நாடு (13,990), கர்நாடகா (11,698) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இதற்கிடையில் நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு 4 ஆயிரத்து 461 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்புகள் 428 ஆக உள்ளது. இதுவரை நாட்டில் 152.78 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. திங்கள்கிழமை (ஜன.11) 82 லட்சத்து 76 ஆயிரத்து 158 தடுப்பூசிகள் போடப்பட்டன.

இதையும் படிங்க : ஜன.31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ABOUT THE AUTHOR

...view details