டெல்லி: நாட்டில் ஒரே நாளில் 14 ஆயிரத்து 313 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு மூன்று கோடியே 42 லட்சத்து 60 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 549 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்புகள் நான்கு லட்சத்து 57 ஆயிரத்து 740 ஆக உள்ளன. கரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 198 ஆக உள்ளது.
இதனால் குணமடைந்தோரின் மொத்த என்ணிக்கை மூன்று கோடியே 36 லட்சத்து 41 ஆயிரத்து 175ஆக உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 105 கோடியே 43 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 73 கோடியே 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 32 கோடியே 66 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:சமூக நீதிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்கத் தேவர்- பிரதமர் நரேந்திர மோடி!