டெல்லி: ஒரே நாளில் 11 ஆயிரத்து 903 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு மூன்று கோடியே 36 லட்சத்து 97 ஆயிரத்து 740 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 311 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்புகள் நான்கு லட்சத்து 59 ஆயிரத்து 191 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 159 ஆக உள்ளது.