தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதிதாக 10,929 பேருக்கு கரோனா தொற்று - கரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 929 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

India  Covid19  Ministry for Health and Family Welfare  Vaccination drive  india count  corona count  corona  corona infection  கரோனா  இந்திய கரோனா எண்ணிக்கை  கரோனா பரவல்  கரோனா தொற்று  கரோனா எண்ணிக்கை
கரோனா

By

Published : Nov 6, 2021, 5:58 PM IST

டெல்லி: ஒரே நாளில் 10 ஆயிரத்து 929 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு மூன்று கோடியே 43 லட்சத்து 44 ஆயிரத்து 683 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 392 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு நான்கு லட்சத்து 60 ஆயிரத்து 265 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 5059 ஆக உள்ளது. இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 37 லட்சத்து 37 ஆயிரத்து 468 ஆக உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 107 கோடியே 92 லட்சத்து 19 ஆயிரத்து 546 பேர் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை 61.39 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மகாராஷ்ரா துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு கரோனா அறிகுறி

ABOUT THE AUTHOR

...view details