டெல்லி:இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி 10 ஆயிரத்து 273 பேர் புதிதாக கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 243 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. நாட்டில் தொற்று விகிதம் மொத்தமாக 1 ஆக உள்ளது.
இந்தியா கரோனா நிலவரம்- 10,273 பேர் பாதிப்பு - 10,273 பேர் பாதிப்பு
இந்தியாவில் நேற்று (பிப். 27) ஒரே நாளில் 10 ஆயிரத்து 273 பேர் புதிதாக கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இன்றைய கரோனா நிலவரம்- 10,273 பேர் பாதிப்பு
நாடு முழுவதும் 1 லட்சத்து 11 ஆயிரத்து 472 பேர் சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாராந்திர தொற்று விகிதம் 1.26 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 439 பேர் குணமடைந்தள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் விகிதம் 98.54 ஆக உள்ளது.
இதையும் படிங்க:வந்தது மூன்றாவது விமானம்: உக்ரைனில் இருந்து 240 மாணவர்கள் நாடு திரும்பினர்