தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தென்மேற்குப்பருவமழை காலகட்டத்தில் இந்தியாவில் சாதாரண அளவிலேயே மழை பெய்யக்கூடும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

தென்மேற்குப்பருவமழை காலகட்டத்தில் இந்தியாவில் சாதாரண அளவில் மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை காலகட்டத்தில் இந்தியாவில் சாதாரண அளவிலேயே மழை பெய்யக்கூடும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
தென் மேற்கு பருவமழை காலகட்டத்தில் இந்தியாவில் சாதாரண அளவிலேயே மழை பெய்யக்கூடும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

By

Published : Apr 15, 2022, 10:42 PM IST

டெல்லி:இந்தியாவில் இந்த வருடத்தின் தென்மேற்குப் பருவ மழை காலகட்டத்தில் சாதாரண அளவிலேயே மழை பெய்யக்கூடுமென இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொழியவிருக்கும் இந்த மழையானது 1971-2020 காலகட்டத்தின் நீண்ட கால சராசரியான 87 செ.மீ என்ற அளவிலேயே பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019,2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவில் சாதாரண அளவிலேயே நான்கு மாத தென்மேற்குப் பருவ மழை பதிவாகியிருந்தது. வருகிற மே மாத இறுதியில், இந்திய வானிலை மையம் இது குறித்த பருவ மாற்றங்களைப் பற்றி வெளியிடும்.

’லாநினா’(La Nina) என சொல்லப்படும் பருவநிலையே, பூமத்திய ரேகை - பசிபிக் பகுதிகளில் பருவமழை காலகட்டத்தில் தொடரும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வட இந்தியா, மத்திய இந்தியா, மற்றும் இமய மலை அடிவாரங்கள் மற்றும் சில வடமேற்கு இந்தியப் பகுதிகளில் சாதாரண முதல் அதை விட அதிக அளவிலான மழைப்பொழிய வாய்ப்புகள் உள்ளணா.

இதையும் படிங்க: 'வாத்தி ரெய்டு... வாத்தி ரெய்டு' - அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதலமைச்சர் திடீர் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details