தமிழ்நாடு

tamil nadu

விமானங்கள் வாங்க மெகா ஒப்பந்தம் போடவுள்ள இந்தியா!

By

Published : Jan 6, 2021, 11:23 AM IST

இந்திய விமானப்படைக்கு 56 போக்குவரத்து விமானங்கள் வாங்க அடுத்த சில மாதங்களில் மெகா ஒப்பந்தங்கள் போட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

India likely to finalise USD 2.5 billion deal to procure 56 transport aircraft for IAF
India likely to finalise USD 2.5 billion deal to procure 56 transport aircraft for IAF

டெல்லி:நாட்டின் ராணுவ திறனை உயர்த்துவதற்காக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பல கொள்முதல் திட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் இறுதி திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு இந்திய விமானப்படைக்கு ஆறு வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு விமானங்கள் உள்பட ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் வாங்க ரூ.28,000 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், இந்திய விமானப்படைக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 56 போக்குவரத்து விமானங்களை வாங்குவதற்கான மெகா ஒப்பந்தத்தை அடுத்த சில மாதங்களில் இந்தியா இறுதி செய்ய வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் விண்வெளி நிறுவனமான ஏர்பஸ் மற்றும் ஒரு இந்திய நிறுவனத்தால் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதில், 16 சி -295 போக்குவரத்து விமானங்கள் ஏர்பஸ் நிறுவனத்தாலும், 40 விமானங்கள் இந்தியாவிலும் தயாரிக்கப்படும்.

விமானத்திற்கான கொள்முதல் செயல்முறைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன எனவும், விரைவில் இந்த ஒப்பந்தம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஃப் இன் அவ்ரோ விமானங்களை மாற்றுவதற்காக அரசாங்கம் இந்த விமானத்தை வாங்குகிறது.

இதையும் படிங்க: ராஜஸ்தானில் போர் விமானம் விபத்து!

ABOUT THE AUTHOR

...view details