நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் இந்திய விண்வெளித்துறை குறித்து உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.
அதில், கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியா வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களை அனுப்பிய புள்ளிவிவரங்களை தெரிவித்துள்ளது. அதன்படி, 2016-21 காலக்கட்டத்தில் 29 நாடுகளைச் சேர்ந்த 285 செயற்கைக்கோள்களை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.