தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பாதுகாப்பை வலுப்படுத்த...!' - கஜகஸ்தான் அமைச்சருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை! - மத்திய பாதுகாப்பு அமைச்சகம்

டெல்லி: இந்தியா வந்திருக்கும் கஜகஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் நுா்லான் யொ்மெக்பாயெவ், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை நேற்று (ஏப்ரல் 9) சந்தித்து கலந்துரையாடினார்.

Kazakhstan
கஜகஸ்தான்

By

Published : Apr 10, 2021, 10:11 AM IST

கஜகஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சா் நுர்லான் யெர்மெக்பாயெவ் நான்கு நாள் பயணமாக, கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி இந்தியா வந்துள்ளார். அவர், நேற்று (ஏப்ரல் 9) பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து கலந்துரையாடினார்.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா-கஜகஸ்தான் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் கலந்துரையாடினர்.

பாதுகாப்பு சார்ந்த தொழிலில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது தொடர்பாக விவாதித்தனர். மேலும், லெபனானில் உள்ள ஐ.நா. அமைதிப்படையில் இடம்பெற்றுள்ள இந்தியப் படைப்பிரிவில் கஜகஸ்தான் துருப்புகளையும் சேர்த்துக்கொண்டதற்கு ராஜ்நாத் சிங்குக்கு நன்றி தெரிவித்தார்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கஜகஸ்தான் அமைச்சரைச் சந்தித்த ராஜ்நாத் சிங்

இந்தச் சந்திப்பின்போது பாதுகாப்புத் துறைச் செயலர் அஜய் குமாா், முப்படைத் தளபதி பிபின் ராவத், கடற்படைத் தலைமைத் தளபதி கரம்பீர் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'ரஷ்யாவுடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம்'

ABOUT THE AUTHOR

...view details