மியான்மரின் ரோஹிங்கியா அகதிகள் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவில் குடியேற அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதன் சட்டவரையறை குறித்து அரசு வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த மத்திய அரசின் துணைத் தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா, "உலகின் குடிபெயரும் மக்கள் அனைவருக்கும் இந்தியா ஒன்றும் தலைநகராக இருக்க முடியாது. இந்த அகதிகள் அனைவரும் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறியவர்கள் என்ற ஆதாரம் முன்னரே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.