டெல்லி: இதுகுறித்து மாநிலங்களையில் இன்று (டிசம்பர் 12)மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலத் ஜோஷி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்தியா ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் ரூ.2.3 லட்சம் கோடி மதிப்பிலான 131.92 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளது. இந்த இறக்குமதி 2020 நிதியாண்டில் 215.25 மெட்ரிக் டன், 248.54 மெட்ரிக் டன்னாகவும், 2019 நிதியாண்டில் 235.35 மெட்ரிக் டன்னாகவும், 2018 நிதியாண்டில் 208.25 மெட்ரிக் டன்னாகவும் இருந்தது.
நடப்பு நிதியாண்டில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விலை டன் ஒன்றுக்கு ரூ. 19,324.79ஆக இருந்தது. இதே நிதியாண்டில் உள்நாட்டு நிலக்கரியின் விலை டன் ஒன்றுக்கு ரூ.2,662.97ஆக இருந்தது.