டெல்லி:இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலக யானை தினத்தில், யானைகளை பாதுகாக்கும் நமது உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறேன். ஆசிய யானைகளில் 60 சதவீதத்தை இந்தியா கொண்டுவந்துள்ளது குறித்து, நீங்கள் மகிழ்ச்சியடையலாம். கடந்த 8 ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. யானைகள் பாதுகாப்பில், ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.”
கடந்த 8 ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்ச்சி - பிரதமர் மோடி ட்விட்டர்
உலக யானை தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8 ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்

india-home-to-about-60-per-cent-of-all-asian-elephants-pm-on-world-elephant-day
“யானைகள் பாதுகாப்பில் வெற்றியை, மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையிலான மோதலை குறைக்கும் பெரும் முயற்சிகள் இந்தியாவில் மேற்கொள்ளப்படுவதுடன், பொருத்திப்பார்க்கவேண்டும். சுற்றுச்சூழல் மீதான ஆர்வத்தை வலுப்படுத்துவதில், உள்ளூர் சமுதாயத்தினரையும், அவர்களது பாரம்பரிய ஞானத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:மத்திய உள்துறை அமைச்சக விருது பெறும் 5 தமிழ்நாடு காவலர்கள்