100 கோடி கரோனா தடுப்பூசி.. இந்தியா வரலாற்று சாதனை!!
நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட தவணைகளின் எண்ணிக்கை 100 கோடியை (1 பில்லியன்) தாண்டியுள்ளது.
India
By
Published : Oct 21, 2021, 11:18 AM IST
டெல்லி : கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தடுப்பூசி இயக்கம் நாடு முழுக்க நடப்பாண்டு ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டது.
தடுப்பூசி பணியை தொடங்கிய 9 மாதங்களில் இந்தியா, 100 கோடி (ஒரு பில்லியன்) என்ற வரலாற்று சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்தச் சாதனை பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டுவருகிறது. ஸ்பைஸ் ஜெட் விமானம் டெல்லி விமான நிலையத்தில் தனது ஊழியர்களுக்கு சிறப்பு சீருடையை அளித்துள்ளது.
மேலும் நாடு முழுக்க பல்வேறு கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வரலாற்று சிறப்புமிக்க இடங்களிலும் கொண்டாட்டங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் நிர்வகிக்கப்படும் கோவிட் -19 தடுப்பூசி எண்ணிக்கை 100 கோடியை தாண்டிய நிலையில் பிரதமர் மோடி ஆர்எம்எல் (ராம் மனோகர் லோகியா) மருத்துவமனைக்கும் சென்று அங்குள்ள பணிகளை பார்வையிட்டார். தேசிய தலைநகரின் செங்கோட்டையில் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் பாடல் ஒன்றை தொடங்கிவைக்கிறார்.
முன்னதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று விடுத்துள்ள புள்ளிவிவர அறிக்கையில், “99.12 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.