தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - ஹர்ஷ் வர்தன் - Harsh Vardhan

டெல்லி: உள்நாட்டிலேயே தடுப்பூசிகளை தயாரிப்பதிலிருந்து கண்டறியும் மையங்களை அமைக்கும் வரை கரோனாவை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

Vardhan
Vardhan

By

Published : Nov 14, 2020, 8:53 PM IST

பிரிக்ஸ் கூட்டமைப்பின் எட்டாவது அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அமைச்சக கூட்டம் நேற்று (நவம்பர் 14) நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் ஆய்வக சோதனை நடைபெற்று வருகிறது. 20 தடுப்பூசிகள் பல்வேறு கட்ட ஆராய்ச்சியில் உள்ளன. இதில் இரண்டு மட்டும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம், பாரத் பயோடெக் ஆகியவை இணைந்து தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி, செரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா தயாரித்த கோபிசில்ட் ஆகியவை மூன்றாம் கட்ட ஆயுத பரிசோதனையில் உள்ளது. உள்நாட்டிலேயே தடுப்பூசிகளை தயாரிப்பதிலிருந்து கண்டறியும் மையங்களை அமைப்பது வரை கரோனாவை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரோனாவை எதிர்கொள்ள பல்வேறு கண்டுபிடிப்புகளை 100 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. கரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்திய அரசு ஒதுக்கியுள்ளது" என்றார்.

ரஷ்ய அறிவியல் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் வலேரி பால்கோவ், பிரேசில் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மார்கோஸ் போண்டஸ் உள்ளிட்ட உறுப்பு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details