டெல்லி: ஊழல் குறித்து கண்காணிக்கும் ட்ரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல் நிறுவனம், ஆசியாவிலேயே லஞ்ச விகிதம் அதிகமாக உள்ள நாடு இந்தியா என தெரிவித்துள்ளது.
ஆசியாவிலேயே லஞ்ச விகிதம் அதிகமுள்ள நாடு இந்தியா!
பொதுத்துறையில் லஞ்சம் அதிகரித்திருப்பது இந்தியாவை சீரழிக்கும் என இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 17 நாடுகளில் 20,000 நபர்களிடம் இந்த கணக்கெடுப்பானது நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து லஞ்சம் கொடுக்கும் 50% மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டபோது, அதில் 32% பேர் லஞ்சம் கொடுக்காவிட்டால் தங்களுக்கு ஆக வேண்டிய நடக்காது என்கின்றனர். இந்த ஆண்டு ஜூன் 17 முதல் ஜூலை 17 வரை இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
பொதுத்துறையில் லஞ்சம் அதிகரித்திருப்பது இந்தியாவை சீரழிக்கும் என இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 17 நாடுகளில் 20,000 நபர்களிடம் இந்த கணக்கெடுப்பானது நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கை, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகள் மோசமான நிலையில் உள்ளன.