பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு இந்தியா திரும்பிக் கொண்டிருந்த நிலையில் கரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கிப் போயுள்ளன. தொழில்கள், வர்த்தகம், சிறு, குறு நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் மைனஸ் 23.96 விழுக்காடு வீழ்ச்சியடைந்தது.
வரலாற்றில் முதல் முறையாக மந்த நிலைக்குள் தள்ளப்பட்ட இந்திய பொருளாதாரம்: ராகுல் காந்தி காட்டம் - பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் செயல்களால் வரலாற்றில் முதல் முறையாக இந்தியப் பொருளாதாரம் மந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், இந்தப் பொருளாதார மந்தநிலையைக் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'வரலாற்றில் முதல் முறையாக இந்தியா பொருளாதாரம் மந்தநிலைக்குள் நுழைந்துள்ளது. பிரதமர் மோடியின் செயல்களால் இந்தியாவின் வலிமையைப் பலவீனமாக மாற்றிவிட்டார்' என்று பதிவிட்டுள்ளார்.
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி 8.6 விழுக்காடாகக் குறையை வாய்ப்புள்ளது. அதாவது வரலாற்றில் இந்தியப் பொருளாதாரம் முதல் முறையாக மந்தநிலைக்குள் செல்ல வாய்ப்புள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.