தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவுக்கு சுமார் 188 கோடி தடுப்பூசி டோஸ்கள் தேவை - உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் - நாட்டின் கோவிட்-19 தடுப்பூசி திட்டம்

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த 188 கோடி தடுப்பூசி டோஸ்கள் தேவை என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Supreme Court
Supreme Court

By

Published : Jun 27, 2021, 8:48 PM IST

நாட்டின் கோவிட்-19 தடுப்பூசி திட்டம் குறித்து உச்ச நீதிமன்றம், ஒன்றிய அரசிடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை ஏற்று ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

பிரமாணப் பத்திரம் தாக்கல்

அதில், "நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி விரைந்து கிடைக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறது. நாட்டில் 18 வயதுக்கும் மேற்பட்டோர் சுமார் 94 கோடி பேர் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

அவர்களுக்கு செலுத்த சுமார் 188 கோடி தடுப்பூசி டோஸ்கள் தேவைப்படும். வரும் ஜூலை மாதத்திற்குள் 51.6 கோடி தடுப்பூசி டோஸ்கள் சந்தையில் கிடைக்கும். நாடு முழுவதும் சுமார் 29 ஆயிரம் தடுப்பூசி சேமிப்பு கிடங்குகள் தற்போது உள்ளன.

இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் முயற்சியில் அரசு களமிறங்கியுள்ளது. மைனஸ் 15 டிகிரி முதல் மைனஸ் 20 டிகிரி வரையிலான தட்பவெட்பத்தில் தடுப்பூசியை சேமித்து வைக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது" என பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:லடாக் விரைந்த பாதுகாப்புத்துறை அமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details