தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உக்ரைனுக்கு இந்தியா மனிதாபிமான உதவி... போர்வை, டென்ட் பொருட்கள் வழங்கல்! - உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு ஸ்லீபிங் பேக், போர்வைகள், டென்ட் அமைக்க தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை மத்திய அரசு வழங்கியது.

ukraine
ukraine

By

Published : Jul 31, 2023, 7:22 PM IST

கீவ் : ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு ஸ்லீபிங் பேக், போர்வைகள், டென்ட் போட தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை மத்திய அரசு வழங்கியது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை தொடங்கியது. ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்த போதிலும், ராணுவ நடவடிக்கை கைவிடப்படவில்லை. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் கோடிக்கணக்கிலான உக்ரைன் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தலைநகர் கீவ் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் உருக்குலைத்தன. ரஷ்ய ராணுவத்திற்கு அஞ்சு லட்சக்கணக்கான மக்கள் உள்நாட்டிலும், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் வெளிநாடுகளிலும் தஞ்சம் அடைந்தனர். போர் இன்றளவும் முடிவராத நிலையில் சொந்த நாட்டிலேயே மக்கள் அகதிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை சமாளிக்க உக்ரைனுக்கு பல்வேறு நாடுகள் உதவிக் கரம் நீட்டி உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் ஐரோப்பிய ஆயுதம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி உதவி வருகின்றன. போரால் பாதிக்கப்பட்டு உள்ள உக்ரைனுக்கு இந்தியா பல்வேறு கட்டங்களாக மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், அடுத்த கட்டமாக உக்ரைன் மக்களுக்கு ஸ்லீபிங் பேக், போர்வைகள், டென்ட் போட தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட உதவிகள் மத்திய அரசு தரப்பில் வழங்கப்பட்டன. மனிதாபிமான உதவிகளை உக்ரைன் அதிகாரிகளிடம் அந்நாட்டிற்கான இந்திய தூதர் ஹர்ஷ் ஜெயின் வழங்கினார்.

இதுகுறித்து உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில், உக்ரைனுக்கான இந்திய தூதர் ஹர்ஷ் ஜெயின், இந்தியா வழங்கிய ஸ்லீபிங் பேக், போர்வைகள், டென்ட் போட தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை ஜாபோரிஜியா மாகாண நிர்வாக தலைவர் முன்னிலையில் சைரோக் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, அமைதியான நகரங்களையும் மக்களையும் தொடர்ந்து பயமுறுத்தும் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களால் உக்ரைனின் மாகாணங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக அந்நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்து உள்ளார். குடியிருப்பு கட்டிடங்கள், மற்றும் பல்கலைக்கழக கட்டிடம் ரஷ்ய ராணுவத்தால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் அதில் அப்பாவி மக்கள் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க :U, U/A சான்றிதழ்களின் மாற்றம்! ஒளிப்பதிவு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details