டெல்லி:இந்திய வங்கதேச எல்லை மிகவும் அமைதியான பன்னாட்டு எல்லையாக கருதப்படுகிறது. வங்கத்தைச் சேர்ந்த சிலர் இதைக் கடந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயல்வதுண்டு. அவ்வாறு, 2018ஆம் ஆண்டிலிருந்து இந்த நாள் வரை ஊடுருவிய 577 பேரை இந்திய அரசு வங்கதேச அரசிடம் ஒப்படைத்துள்ளது.
2018ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்தாண்டு மே 1ஆம் தேதி வரையில், மேற்கு வங்கத்தின் வழியாக 480 பேர், திரிபுராவின் வழியாக 71 பேர், மேகாலயா வழியாக 18 பேர், அஸ்ஸாம் வழியாக 8 பேர் என மொத்தம் 577 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளனர் என அரசாங்கத் தகவல் தெரிவிக்கிறது.