டெல்லி: கரோனா தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 சதவீதமாக சரிந்தது. இதையடுத்து 2021ஆம் ஆண்டு 8.3 சதவீதமாக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து நடப்பாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 8.8 சதவீதமாக உயரும் என மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் நிறுவனம் கடந்த மே மாதம் கணித்திருந்தது.
இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவீதமாக குறையும் என மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் நிறுவனம் கணித்துள்ளது. ஜிடிபி குறைவுக்கு பணவீக்கம் முக்கிய காரணமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.