தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா - பிரான்ஸ் இடையிலான வியூக ரீதியான பேச்சுவார்த்தை! - இந்திய ஃபிரான்ஸ் இடையிலான வியூக ரீதியான பேச்சுவார்த்தை

டெல்லி: இந்தியா - பிரான்ஸ் நாடுகளுக்கிடையேயான வியூக ரீதியான பேச்சுவார்த்தை ஜனவரி ஏழாம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தியா ஃபிரான்ஸ்
இந்தியா ஃபிரான்ஸ்

By

Published : Jan 6, 2021, 4:46 PM IST

இந்தியா - பிரான்ஸ் நாடுகளுக்கிடையேயான வியூக ரீதியான வருடாந்திர பேச்சுவார்த்தை ஜனவரி ஏழாம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமைலியான இந்திய குழு இதில் கலந்துகொள்ளவுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் சார்பில் அந்நாட்டு அதிபரின் தூதரக ஆலோசகர் இம்மானுவேல் பொன்னே தலைமையிலான குழு இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளது. இருதரப்பு, உலகளாவிய விவகாரங்கள் இதில் ஆலோசிக்கப்படவுள்ளது. இந்த பயணத்தின்போது, இந்திய அரசின் உயர் மட்ட அலுவலர்களை இம்மானுவேல் பொன்னே சந்திக்கவுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டுக்கான வியூக ரீதியான பேச்சுவார்த்தை பாரிஸில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details