டெல்லி:இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் இன்று (ஆக.29) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லும் பயணிகள் விமானம், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் விமானம் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
இந்தத் தடையானது, சர்வதேச சரக்கு விமான சேவைகளுக்கு பொருந்தாது. சர்வதேச விமானங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட விமானப் பாதைகளில், திட்டமிட்டப்படி பயணிக்க அனுமதிக்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு மாதம் நீட்டிப்பு
முன்னதாக, ஜூலை 31ஆம் தேதி விதிக்கப்பட்டிருந்த தடையை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டித்து, கடந்த ஜூலை 30ஆம் தேதி விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கரோனா பரவலின் தீவிரம் காரணமாக, சர்வதேச நாடுகளுக்கான விமான சேவைகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்திருந்தது.