தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு - மத்திய அரசு - விமானப் போக்குவரத்துத்துறை இயக்குனரகம்

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடையை வரும் டிசம்பர் 31ஆம் தேதிவரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

international flights
international flights

By

Published : Nov 26, 2020, 4:14 PM IST

கோவிட்-19 பரவல் காரணமாக சர்வதேச அளவிலான விமான போக்குவரத்து கடந்த மார்ச் மாதம் முதல் முடக்கத்தில் உள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் 23ஆம் தேதிமுதல் அனைத்து சர்வதேச விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம் இணைந்து வந்தே பாரத் திட்டம் மூலம் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டுக் கொண்டுவருகின்றன.

இந்நிலையில், சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சர்வதேச கமர்சியல் பயணிகள் விமான சேவைக்கான தடை வரும் டிசம்பர் 31ஆம் தேதிவரை தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேவேளை வந்தே பாரத் திட்டம் வழக்கம்போலத் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக மீண்டுள்ளது: சக்திகாந்த தாஸ்

ABOUT THE AUTHOR

...view details