டெல்லியில் உள்ள சர்வதேச இந்திய மையத்தில் நடைபெற்ற ’ஏஜ் கேர் இந்தியா’ (Age Care India) முதியோர் அமைப்பின் 40ஆவது ஆண்டு விழாவில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "ஒரே ஒரு கரோனா பரிசோதனை ஆய்வகத்தில் தொடங்கி தற்போது நாடு முழுவதும் 2,000 ஆய்வகங்கள் என்பது வரை இந்தியா நீண்ட தூரம் பயணித்துள்ளது. இதுவரை 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினை நாம் ஏற்றுமதி செய்துள்ளோம். அதே நேரத்தில் 7.5 கோடி டோஸ்கள் மருந்து நம்மிடம் இருப்பில் உள்ளது. 6.5 கோடி டோஸ்களுக்கும் மேற்பட்ட மருந்து பிற நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ஒருவகை மலேரியா எதிர்ப்பு மருந்து ஆகும். இது முடக்கு வாதம், லூபஸ் போன்ற நோய்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. சென்ற ஆண்டு கரோனா தொற்று பரவத் தொடங்கிய சமயத்தில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து இறப்பு விகிதத்தை கணிசமாகக் குறைப்பதாக தகவல் பரவத் தொடங்கியது.