புதுடெல்லி (இந்தியா): கனடாவில் உள்ள புதுடெல்லியின் உளவுத்துறை தலைவரை கனடா வெளியேற்றியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதரக அதிகாரியை, அடுத்த ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜர் கனடாவின் சுரே பகுதியில், ஜூன் 18 ஆம் தேதி, சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை அடுத்து, ஹர்தீப் சிங் நிஜர் கொலையில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக கனடா அரசு குற்றம் சாட்டியது. மேலும் கனடா நாடாளுமன்ற அமர்வின் போது, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜர் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறினார்.
இதையும் படிங்க:அமெரிக்காவின் விவசாய பொருட்களுக்கு வரியை குறைத்த இந்தியா! என்ன காரணம்?
இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்த மத்திய அரசு, சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு அரசியலை நடத்துவதாக இந்தியா தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து ஒட்டாவாவில் உள்ள புதுடெல்லியின் உளவுத்துறை தலைவரை கனடா வெளியேற்றியது. இந்திய தூதரக அதிகாரி பவன் குமார் ராயை கனடா வெளியேற்றியதாக கனடா நாட்டின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் மூத்த கனேடிய தூதரக அதிகாரியை இந்தியா வெளியேற்றுவதாக முடிவு எடுத்தது. வெளியுறவு அமைச்சகம், இந்தியாவில் உள்ள மூத்த கனேடிய தூதரக அதிகாரி கேமரூன் மெக்கேவை அழைத்தது. அவரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு தெரிவித்தது. இதனால் இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு முறியும் அபாயத்தில் உள்ளது. இந்திய அரசின் இந்த முடிவானது, இந்திய உள் விவகாரங்களில் கனட தூதர்கள் தலையீடுவதாலும், இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவதாலும் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க:காஞ்சி பட்டு முதல் காஷ்மீரி பஷ்மினா, ஜிக்ரானா இட்டார் வரை.. ஜி20 தலைவர்களுக்கு இந்தியா வழங்கிய பரிசுகள் விபரம்!