டெல்லி:இந்தியாவில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று (ஜூன் 15) ஒரே நாளில் 12,213 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் கடந்த 24 மணிநேரத்தில் 38.4 சதவீதம் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. மேலும் தற்போது இந்தியா முழுவதும் கரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 53ஆயிரத்து 637ஆக உயர்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரி முதல் ஒரு நாள் பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டாத நிலையில் தற்போது அதிகரித்துள்ளது. பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, நாடு முழுவதும் இதுவரை 5 லட்சத்து 24 ஆயிரத்து 792 பேர் கரோனா தொற்றால் இறந்துள்ளனர்.
இதில் தமிழ்நாட்டில் 26ஆயிரத்து 223 பேரும், டெல்லியில் 23ஆயிரத்து 525 பேரும் இறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனா தொற்று பாதிப்பால் 3 மாதத்திற்கு பின்னர் முதல் இறப்பு!