தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசிகள்; இந்தியாவில் வேகமெடுக்கும் தடுப்பூசி திட்டம்

இந்தியாவில் ஒரே நாளில் அதிக அளவாக 20 லட்சம் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கோவிட்-19 தடுப்பூசி
கோவிட்-19 தடுப்பூசி

By

Published : Mar 9, 2021, 8:07 PM IST

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரே நாளில் அதிக அளவாக சுமார் 20 லட்சம் பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 16ஆம் தேதி கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதுவரை இரண்டு கோடியே 30 லட்சத்து எட்டாயிரத்து 733 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட திட்டத்தில் முன்களப் பணியார்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. பின்னர், இரண்டாம் கட்ட தடுப்பூசி திட்டம் மார்ச் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த இரண்டாம் கட்ட திட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏராளமானோர் ஆர்வம் காட்டுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:உத்தரகாண்டில் அரசியல் திருப்பம்: முதலமைச்சர் திடீர் ராஜினாமா

ABOUT THE AUTHOR

...view details