டெல்லி: இந்தியாவில் கரோனா எண்ணிக்கை குறைந்துவருகிறது. இன்று (பிப்ரவரி 11) சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, 58,077 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை நான்கு கோடியே 25 லட்சத்து 36 ஆயிரத்து 137 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் தொற்று விகிதம் 1.64% ஆகும்.
இந்தியாவில் அதிகம் தொற்று பாதித்த மாநிலத்தில் முதல் ஐந்து இடங்களில் கேரளா இரண்டு லட்சத்து 33 ஆயிரத்து 747 என்ற எண்ணிக்கையுடன் முதல் இடத்திலும், அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா 74 ஆயிரத்து 108 எண்ணிக்கையுடன் இரண்டாவது இடத்திலும், 66 ஆயிரத்து 992 பேர் தொற்று பாதிக்கப்பட்டு தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளன. நான்கு மற்றும் ஐந்து இடங்களில் கர்நாடகா (52,047), ஆந்திரா( 40,884) ஆகிய மாநிலங்களில் உள்ளன.