இந்தியாவில் நேற்று (ஜூன் 20) ஒரேநாளில் 53 ஆயிரத்து 256 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியே 99 லட்சத்து 35 ஆயிரத்து 221ஆக உள்ளது.
நேற்று மட்டும் 1422 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை மூன்று லட்சத்து 88 ஆயிரத்து 135 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை இரண்டு கோடியே 88 லட்சத்து 44 ஆயிரத்து 199 ஆக உள்ளது. தற்போது ஏழு லட்சத்து இரண்டாயிரத்து 887 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மேலும் இதுவரை மொத்தம் 28 கோடியே 36 லட்சத்து 898 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:யோகா தினம்: திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர்