நேற்று முன்தினம் (ஜூன் 5) தினசரி கரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 529 ஆக இருந்தது. நேற்று (ஜூன் 6) ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 460 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியிருந்தது.
இந்த நிலையில், இன்று (ஜூன் 7) கரோனா பாதிப்பு மேலும் சரிந்துள்ளது. இதன்படி இந்தியாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு ஒரு லட்சமாகக் குறைந்துள்ளது.
தற்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 89 லட்சத்து ஒன்பதாயிரத்து 975 ஆக உயர்வடைந்துள்ளது.
குணமடைந்தோர் எண்ணிக்கை இரண்டு கோடியே 71 லட்சத்து 59 ஆயிரத்து 180 ஆக உயர்வடைந்துள்ளது. மொத்த உயிரிழப்பு 3,49,186 ஆக உள்ளது. இதுவரை 14,01,609 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மொத்தம் 23,27,86,482 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் குறைந்துவரும் கரோனா பாதிப்பு