தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் கரோனா பரவல் குறைந்தது: 1.49 லட்சம் புதிய தொற்றாளர்கள் - 1.49 லட்சம் புதிய தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 394 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைவிட தொற்று விகிதம் 13 விழுக்காடு குறைந்துள்ளது.

இந்தியாவில் கரோனா பரவல் குறைந்தது; 1.49 லட்சம் புதிய தொற்று
இந்தியாவில் கரோனா பரவல் குறைந்தது; 1.49 லட்சம் புதிய தொற்று

By

Published : Feb 4, 2022, 12:20 PM IST

டெல்லி: இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை தற்போது குறையத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து மத்திய சுகாதார ஆணையம் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 394 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 72 நபர்கள் இறந்துள்ளனர்.

இதனால் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 55 ஆக உயர்ந்துள்ளது. கடந்த நாள்களைக் காட்டிலும் தற்போது கரோனா பரவல் விகிதம் குறைந்துவருவதாகவும், 9.27 விழுக்காடு குறைந்து காணப்படுகிறது எனவும் கூறியுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, நாட்டில் வாராந்திர தொற்றுப் பரவல் தற்போது 12.03 விழுக்காடாக உள்ளது, அதே நேரத்தில் தினசரி தொற்றுப் பரவல் 9.27 விழுக்காடாக உள்ளது.

குணமடைந்தோர் எண்ணிக்கை

நேற்று இந்தியா முழுவதும் தொற்றிலிருந்து இரண்டு லட்சத்து 46 ஆயிரத்து 674 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா தொடங்கியதிலிருந்து குணமடைந்த நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை நான்கு கோடியே 17 ஆயிரத்து 88 ஆக உள்ளது. இந்தியாவில் ஒட்டு மொத்தமாகக் குணமடைந்தோர் விகிதம் 95.39 விழுக்காடாகும்.

இதையும் படிங்க:இதுதான் நீட் தேர்வை ரத்துசெய்யும் லட்சணமா? - ஸ்டாலினிடம் ஓபிஸ் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details