டெல்லி: இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை வேகம் தீவிரமெடுத்துவருகிறது. அதேசமயம், குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. புதிய நோய்த்தொற்றுகளைவிட குணமடையும் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
கரோனா: இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 82.33% ஆக உயர்வு! - கரோனா இரண்டாவது அலை
இந்தியாவில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் விகிதம் 82.33 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.
கரோனா: இந்தியாவில் மீட்பு விகிதம் 82.33 சதவீதமாக உயர்வு!
அதிகாரப்பூர்வமாக நேற்று (ஏப். 28) வெளியான அறிக்கையில், ”இந்தியாவில் கரோனா தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது ஒரு கோடியே 48 லட்சத்து 17 ஆயிரத்து 371 ஆக உள்ளது. தேசிய அளவில் குணமடைந்தோர் விகிதம் 82.33 விழுக்காடாகும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.