தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் கோவிட் மீட்பு விகிதம் 97.99% ஆக அதிகரிப்பு! - India

இந்தியாவில் கோவிட் பெருந்தொற்று வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மீட்பு விகிதம் 97.99% ஆக அதிகரித்துள்ளது.

COVID-19
COVID-19

By

Published : Oct 10, 2021, 1:52 PM IST

ஹைதராபாத் : நாட்டில் ஒரே நாளில் 18 ஆயிரத்து 166 பேர் புதிதாக கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 214 ஆக உள்ளது.

அந்த வகையில், இதுவரை நாடு முழுக்க 3 கோடியே 39 லட்சத்து 53 ஆயிரத்து 475 பேர் கோவிட் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 4 லட்சத்து 50 ஆயிரத்து 589 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் தற்போது 2 லட்சத்து 30 ஆயிரத்து 971 பேர் கோவிட் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது கடந்த 208 நாள்களில் இல்லாத வகையில் குறைவாகும்.

இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்தில் 66 லட்சத்து 85 ஆயிரத்து 415 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அந்த வகையில் இதுவரை நாட்டில் 94.70 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 23 ஆயிரத்து 624 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர். நாட்டில் மீட்பு விகிதம் 97.99% ஆக அதிகரித்துள்ளது.

இது மார்ச் 2020க்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான அதிகரிப்பாகும். இந்தத் தகவல்கள் ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

இந்நிலையில், “இதுவரை 58.25 கோடி பேரின் சளி உள்ளிட்ட மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று (அக்.9) மட்டும் 12 லட்சத்து 83 ஆயிரத்து 212 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன” என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படுங்கள்’ - தமிழிசை

ABOUT THE AUTHOR

...view details