ஹைதராபாத்: கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் முனைப்பில் நாட்டில் இதுவரை 94 கோடி கோவிட் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 79 லட்சத்து 12 ஆயிரத்து 643 பேருக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இதற்கிடையில் நேற்று மட்டும் ஒரே நாளில் 19 ஆயிரத்து 740 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. உயிரிழப்பு 248 ஆக பதிவாகியுள்ளது.
அந்த வகையில் நாட்டில் இதுவரை 3 கோடியே 39 லட்சத்து 35 ஆயிரத்து 309 பேர் கோவிட் பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 4 லட்சத்து 50 ஆயிரத்து 375 ஆக உள்ளது.
நாட்டில் தற்போது 2 லட்சத்து 36 ஆயிரத்து 643 கோவிட் பாதிப்பாளர்கள் சிகிச்சையில் உள்ளனர். இது கடந்த 206 நாள்களில் இல்லாத வகையில் குறைவாகும்.
அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 23 ஆயிரத்து 70 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர். சிகிச்கைக்கு பின்னர் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 48 ஆயிரத்து 291 ஆக உள்ளது. மேற்கூறிய இந்தத் தகவல்கள் ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி, “அக்டோபர் 8ஆம் தேதி 13 லட்சத்து 85 ஆயிரத்து 706 பேரின் சளி உள்ளிட்ட மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 58 கோடி பேரின் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2030 ஆண்டுக்குள் 30% எலக்ட்ரிக் கார்கள் - நிதின் கட்கரி இலக்கு