தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்... 24 மணி நேரத்தில் 20 ஆயிரம் பேர் பாதிப்பு! - India COVID-19

கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 346 பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

India COVID-19 tracker
India COVID-19 tracker

By

Published : Oct 5, 2021, 1:33 PM IST

ஹைதராபாத் : நாட்டில் ஒரே நாளில் 18 ஆயிரத்து 346 பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிப்பு 263 ஆக பதிவாகியுள்ளது.

இது குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில், “நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 8 ஆயிரத்து 850 பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர், உயிரிழப்பு 149 ஆக உள்ளது.

எனினும் கடந்த 201 நாள்களில் இல்லாத வகையாக கரோனா வைரஸ் பாதிப்பாளர்கள் குறைந்துள்ளனர். தற்போது 2 லட்சத்து 52 ஆயிரத்து 902 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


அதே நேரத்தில் தேசிய அளவிலான மீட்பு விகிதம் 97.93 விழுக்காடு ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை 91.54 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிக்கையில், “இதுவரை 57.53 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை (அக்.4) மட்டும் 11 லட்சத்து 41 ஆயிரத்து 642 மாதிரிகள் சோதிக்கப்பட்டன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : திருப்பதியில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி எப்போது?

ABOUT THE AUTHOR

...view details