தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரேநாளில் 24,354 பேருக்கு கரோனா பாதிப்பு

இந்தியாவில் ஒரே நாளில் 24 ஆயிரத்து 354 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

India COVID-19 tracker  India COVID state wise report  India coronavirus count  India COVID data  India COVID deaths  India COVID statistics  கரோனா  கரோனா பரவல்  கரோனா தொற்று  இந்திய கரோனா  இந்திய கரோனா நிலவரம்  கரோனா நிலவரம்  கொரோனா பாதிப்புகள்  கரோனா எண்ணிக்கை
கரோனா

By

Published : Oct 2, 2021, 1:25 PM IST

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24 ஆயிரத்து 354 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 37 லட்சத்து 91 ஆயிரத்து 61ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 455 நபர்கள் தொற்றிலிருந்து குணமடைந்தனர். நாடு முழுவதும் தொற்றிலிருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 30 லட்சத்து 68 ஆயிரத்து 599ஆக அதிகரித்ததுள்ளது.

இதையடுத்து கடந்த 24 மணிநேரத்தில் 234 பேர் தொற்று காரணமாக ஒரேநாளில் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 48 ஆயிரத்து 573ஆக அதிகரித்துள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின்கீழ், நாட்டில் இதுவரை 89 கோடியே 74 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அக்டோபர் ஒன்று வரை 56 கோடியே 57 லட்சத்து 30 ஆயிரத்து 31 பேரின் சளி உள்ளிட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று (அக்டோபர் 1) மட்டும் ஒரே நாளில் 13 லட்சத்து 21 ஆயிரத்து 780 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

இதையும் படிங்க: அண்ணல் காந்தியடிகள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை!

ABOUT THE AUTHOR

...view details