தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மீண்டும் தலைதூக்கும் கரோனா: புதிய வகை டெங்கு - கரோனா மூன்றாம் அலை

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 30,773 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

India COVID-19 tracke

By

Published : Sep 19, 2021, 3:37 PM IST

டெல்லி:நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கரோனா தொற்றின் மூன்றாம் அலை அக்டோபர் மாத தொடக்கத்தில் வலுப்பெறக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திவருகிறது.

இந்த நிலையில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,"இந்தியா முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 30,773 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

309 பேர் உயிரிழந்துள்ளனர். 38,945 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி மொத்த பாதிப்பு 3 கோடியே 34 லட்சத்து 48 ஆயிரத்து 163ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 4,44,838 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 26 லட்சத்து 71 ஆயிரத்து 167ஆகவும் உயர்ந்துள்ளது. தற்போது 3,32,158 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" எனத் தெரவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செரோடைப்-2 வகை டெங்கு காய்ச்சல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் அதிகளவில் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details