தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் மேலும் 45,083 பேருக்கு கரோனா - India coronavirus count

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 460 நபர்கள் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு

By

Published : Aug 29, 2021, 11:13 AM IST

இந்தியாவில் அடுத்த ஒரு சில வாரங்களில் கரோனா மூன்றாம் அலை எற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாட்டில் மேலும் 45 ஆயிரத்து 83 நபர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மூன்று கோடியே 26 லட்சத்து 95 ஆயிரத்து 30 நபர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (ஆக.28) மட்டும் 460 உயிரிழந்துள்ளனர். நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்து 37 ஆயிரத்து 830ஆக அதிகரித்துள்ளது. மூன்றாயிரத்து 68 ஆயிரத்து 558 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 35 ஆயிரத்து 840 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ”இதுவரை நாட்டில் 51 கோடியே 86 லட்சத்து 42 ஆயிரத்து 929 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று (ஆகஸ்ட் 28) மட்டும் 17 லட்சத்து 55 ஆயிரம் 327 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளபட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 31 ஆயிரத்து 265 நபர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details