டெல்லி: இந்தியாவில் மேலும் 44 ஆயிரத்து 658 நபர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மூன்று கோடியே 26 லட்சத்து 49 ஆயிரத்து 947 நபர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 509 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்து 37 ஆயிரத்து 307ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மூன்று கோடியே 18 லட்சத்து 52 ஆயிரத்து 802 பேர் குணமடைந்துள்ளனர். மூன்றாயிரத்து 59 ஆயிரத்து 775 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 51 கோடியே 68 லட்சத்து 87 ஆயிரத்து 602 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
நேற்று (ஆக.28) மட்டும் இதுவரை இல்லாத வகையில் ஒரு கோடி நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மொத்தமாக இதுவரை 62 கோடியே 29 லட்சத்து 89 ஆயிரத்து 134 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதையும் படிங்க:ஒரு கோடியைத் தாண்டிய தடுப்பூசி பயனர்கள் - பிரதமர் பாராட்டு