இந்தியாவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கரோனா பாதிப்பு தினசரி 30 ஆயிரத்திலிருந்து, 45 ஆயிரம்வரை பதிவாகிறது. இதனால் மக்களிடம் கரோனா மூன்றாம் அலை குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 44 ஆயிரத்து 658 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 26 லட்சத்து 3 ஆயிரத்து 188ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 32 ஆயிரத்து 988 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாக 3 கோடியே 18 லட்சத்து 21ஆயிரத்து 428 ஆக உள்ளது. தற்போது 3 லட்சத்து 44 ஆயிரத்து 899 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 496 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 36 ஆயிரத்து 861ஆக அதிகரித்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 61 கோடியே 22 லட்சத்து 8 ஆயிரத்து 542 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
கேரளாவில் ஓணம், பக்ரீத் பண்டிகையொட்டி வழங்கிய தளர்வுகள் காரணமாக மாநிலத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று மட்டும் அங்கு, 30ஆயிரத்து 7 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 496 பேர் உயிரிழந்தனர்.