தினசரி கரோனா பாதிப்பு நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (ஆகஸ்ட் 24) வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25 ஆயிரத்து 467 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை மூன்று கோடியே 24 லட்சத்து 74 ஆயிரத்து 773ஆக அதிகரித்துள்ளது. தற்போது நான்கு லட்சத்து 35 ஆயிரத்து 110 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
நேற்று 354 பேர் கரோனாவால் உயிரிழந்த நிலையில், நாட்டின் மொத்த கரோனா இறப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்து 35 ஆயிரத்து 110 ஆக உயர்ந்துள்ளது.
பரிசோதனை, தடுப்பூசி நிலவரம்
கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 50 கோடியே 93 லட்சத்து 91 ஆயிரத்து 792 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று (ஆகஸ்ட் 23) மட்டும் 16 லட்சத்து 47 ஆயிரத்து 526 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 24 மணிநேரத்தில் 63 லட்சத்து 85 ஆயிரத்து 298 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 58 கோடியே 89 லட்சத்து 97 ஆயிரத்து 805 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:ஆப்கனிலிருந்து 78 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் மீட்பு