நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 72 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை மூன்று கோடியே 24 லட்சத்து 49 ஆயிரத்து 306 ஆக உள்ளது.
நேற்று (ஆகஸ்ட் 22) மட்டும் 389 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை நான்கு லட்சத்து 34 ஆயிரத்து 756 ஆக உயர்ந்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை மூன்று கோடியே 16 லட்சத்து 80 ஆயிரத்து 626 ஆக உள்ளது.