ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் கரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில், "கடந்த 24 மணி நேரத்தில் 28 ஆயிரத்து 204 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதன்மூலம் பாதித்தவரின் எண்ணிக்கை 3 கோடியே 19 லட்சத்து 98 ஆயிரத்து 158ஆக அதிகரித்துள்ளது. கடந்த 147 நாள்களில் மிகக்குறைந்த அளவாக கரோனா பாதிப்பு இன்று பதிவாகியுள்ளது. நேற்று (ஆக.09) தொற்றிலிருந்து 41 ஆயிரத்து 511 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாக இதுவரை 3 கோடியே 11 லட்சத்து 80 ஆயிரத்து 968 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.