இந்தியாவில் நேற்று (ஆக.03) புதிதாக 42 ஆயிரத்து 625 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை மூன்று கோடியே 17 லட்சத்து 69 ஆயிரத்து 132ஆக அதிகரித்துள்ளது.
36,668 பேர் குணம்
கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரத்து 668 பேர் குணமடைந்த நிலையில் மொத்தமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே ஒன்பது லட்சத்து 33 ஆயிரத்து 22ஆக அதிகரித்துள்ளது.
562 பேர் உயிரிழப்பு
நேற்று மட்டும் 562 பேர் கரோனாவால் உயிரிழந்த நிலையில், நாட்டின் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 25 ஆயிரத்து 757ஆக உயர்ந்துள்ளது. மேலும் மொத்தமாக தொற்றிலிருந்து இதுவரை மூன்று கோடியே ஒன்பது லட்சத்து 33 ஆயிரத்து 22 பேர் மீண்டுள்ளனர்.
கரோனா தடுப்பூசி
கடந்த 24 மணி நேரத்தில் 62 லட்சத்து 52 ஆயிரத்து 741 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுவரை மொத்தமாக 48 கோடியே 52 லட்சத்து 86 ஆயிரத்து 570 தடுப்பூசி டோஸ்கள், பயனர்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:சென்னை கோயம்புத்தூரில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு