தினசரி கரோனா பாதிப்பு நிலவரத்தை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (ஆகஸ்ட் 3) வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30 ஆயிரத்து 549 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை மூன்று கோடியே 17 லட்சத்து 26 ஆயிரத்து 507ஆக அதிகரித்துள்ளது. தற்போது நான்கு லட்சத்து நான்காயிரத்து 958 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
நேற்று மட்டும் (ஆகஸ்ட் 2) 422 பேர் கரோனாவால் உயிரிழந்த நிலையில், நாட்டின் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 25 ஆயிரத்து 195 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மொத்தமாகத் தொற்றிலிருந்து இதுவரை மூன்று கோடியே எட்டு லட்சத்து 96 ஆயிரத்து 354 பேர் மீண்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 61 லட்சத்து ஒன்பதாயிரத்து 587 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நிலையில் மொத்தமாக 47 கோடியே 85 லட்சத்து 44 ஆயிரத்து 114 தடுப்பூசி டோஸ்கள், பயனர்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:வூஹானில் இருந்தே கரோனா பரவியது: அமெரிக்க குடியரசு கட்சி