தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வருகிறதா 3ஆம் அலை- 38 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு! - கரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 79 பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

India COVID-19 tracker: state-wise report
India COVID-19 tracker: state-wise report

By

Published : Jul 17, 2021, 11:02 AM IST

ஹைதராபாத்: நாட்டில் புதிதாக கரோனா பாதித்தவர்கள் குறித்த புள்ளிவிவர தகவல்களை ஒன்றிய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை (ஜூலை 17) காலை 8 மணிக்கு வெளியிட்டது.

அதன்படி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38 ஆயிரத்து 79 பேர் கரோனா பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய உயிரிழப்புகள் 560 ஆக பதிவாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்புகள் 4 லட்சத்து 13 ஆயிரத்து 91 ஆக உயர்ந்துள்ளது.

பாதிப்பை பொறுத்தமட்டில் நாடு முழுக்க 3 கோடியே 10 லட்சத்து 64 ஆயிரத்து 908 ஆக உள்ளது. தற்போதுவரை 4 லட்சத்து 24 ஆயிரத்து 25 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


இதற்கிடையில் ஜூலை 16ஆம் தேதிவரைக்குள் 44 லட்சத்து 20 லட்சத்து 21 ஆயிரத்து 954 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதில் 19 லட்சத்து 98 ஆயிரத்து 715 மாதிரிகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 16) சோதிக்கப்பட்டன. நாடு முழுக்க 39 கோடியே 96 லட்சம் பேருக்கு கோவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

நாடு முழுக்க கரோனா பாதிப்புகள் குறைந்துவந்த நிலையில் தற்போது கடந்த 4-5 நாள்களாக பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்கியும் அதிகரித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்!

ABOUT THE AUTHOR

...view details