தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா நிலவரம்: ஒரே நாளில் 38,949 பேருக்கு பாதிப்பு - கரோனா தடுப்பூசி திட்டம்

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38 ஆயிரத்து 949 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

India COVID-19 tracker
India COVID-19 tracker

By

Published : Jul 16, 2021, 10:48 AM IST

தினசரி கரோனா பாதிப்பு நிலவரத்தை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (ஜூலை 16) வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38 ஆயிரத்து 949 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு நிலவரம்

இதையடுத்து நாட்டின் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை மூன்று கோடியே 10 லட்சத்து 26 ஆயிரத்து 829ஆக அதிகரித்துள்ளது. தற்போது நான்கு லட்சத்து 30 ஆயிரத்து 422 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 542 பேர் கரோனாவால் உயிரிழந்த நிலையில், நாட்டின் மொத்த கரோனா இறப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்து 12ஆயிரத்து 531 ஆக உயர்ந்துள்ளது.

மூன்றாம் அலை தொடர்பாக நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவித்துவரும் நிலையில், கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளது.

பரிசோதனை, தடுப்பூசி நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை நாட்டில் 44 கோடிக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று (ஜூலை 15) மட்டும் 19 லட்சத்து 55 ஆயிரத்து 501 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 24 மணிநேரத்தில் 38 லட்சத்து 78 ஆயிரத்து 078 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 39 கோடியே 53 லட்சத்து 43 ஆயிரத்து 767 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:குடியரசுத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details